பகுதி-3 : யார் நமது பிரார்த்தனைக்கு பதில் சொல்கிறார்கள் ??
....பிரார்த்தனை எப்படி பலிக்கிறது ? அதன் மதி நுட்பம், தாத்பர்யம் என்ன ? யார் நமது பிரார்த்தனைக்கு பதில் சொல்கிறார்கள் ?
போன பகுதியில் படித்தது போல பிரார்த்தனையின் போது நம்மைச் சுற்றி வரும் ஆற்றல்கள் எப்போது சரியாக இருக்கும் ? மூன்று சிருஷ்டிகளில் மட்டமான குணமான 'தனக்கு மட்டும் நல்லது வேண்டும்', 'மற்றவர்களை முன்னேற விடக்கூடாது' ஆகியன இல்லாத போது தான். இதில் நம் உடலின் மூலக்கூறுகள் (பஞ்சபூதம்) அவற்றின் பணியை ஆற்றுகின்றன. மேலும், நன்றியுடன் பக்தி செலுத்தும்போது உயர்ந்த சுயநலம் இல்லாத குணம் பெருகுகிறது. அதாவது இந்த நிகழ்வில் தேக சுத்தி மனோ சுத்தி உண்டாகிறது.
இந்த மாற்றத்தால், நமக்கும் தெய்வீகத்திற்கும் நடுவில் இடைவெளி குறைகிறது. அப்போது நமக்கு இது வேண்டும் அது வேண்டும் என்ற நினைப்பு குறைந்து, மற்றவர்களுக்கு உதவி செய்யும் வகையில், நமக்கும் தெய்வீக தன்மை இருக்க வேண்டும் என்ற நினைப்பு வரும். நம்மால் முடியாததை நம்மை விட சக்தி வாய்ந்த ஒன்றின் முன்பு நாம் தலை வணங்கி வேண்டுவதால், மீதி இருக்கும் விரும்பாத குணமும் கரைந்து விடும். இதுவே நாம் தெய்வீகத்திற்கு அருகில் வந்து விட்டோம் என்று பொருள்.
அடுத்து நாம் பார்க்க வேண்டியது நம் கர்மா, தலை எழுத்து. கர்மாவின் படியே எல்லாம் நடக்கும் என்றால், அப்போது பிரார்த்தனை பயனில்லையா ? நல்லது, கெட்டது இரண்டுமே கர்மாதான். கெட்டது நடக்கும் போது மட்டும் பிரார்த்தனை செய்தால் நல்லது நடக்குமா ? அது அல்ல விதி ! பிறகு ?
1. பிரார்த்தனையானது கர்மபலனை விட பலம் உள்ளதாக இருந்தால் கர்மபலனின் நல்ல அம்சம் கூடும் அல்லது கெட்ட அம்சம் குறையும்.
2. பிரார்த்தனையை விட கர்மபலன் பலமாக இருந்தால் அப்போது பிரார்த்தனை குறைந்த பலன் அல்லது பலனே வராமல் போகலாம்.
சரி. பிரார்த்தனைக்கு பலன் எந்த அளவில் இருக்கும் ? அதற்கும் விதிகள் உள்ளன.
இந்த ஐந்து அம்சங்களும் ஒன்றாக இருந்து வேண்டுவோர் மிக குறைவுதான். சரி. இந்த ஐந்தில் முதலாவது பற்றி அறிவோமா ? (அடுத்த பாகம்)
- ஒருவருடைய ஆன்மீக, பக்தியின் உயர்வு நிலை;
- வேண்டுதலின் தன்மை (வேண்டா வெறுப்பாக / பலன் கிடைக்குமா என்ற சந்தேகம் / ஏதோ பேருக்கு / சாதாரண பக்தி / மனம் உருகி ... என்று பல வகை);
- என்ன வேண்டுகிறோம், யாருக்காக வேண்டுகிறோம் (சமுதாயத்திற்காக வேண்டும்போது, தூய சக்தி வாய்ந்த ஒரு குரு அல்லது சந்நியாசி வழி மட்டுமே தான் அது நிறைவேறும்);
- எப்போதுமே கர்வம் இல்லாமல் அடக்கமாக இருந்தது;
- எந்த விதமாக (the pose - அங்கங்கள் நிலை) வேண்டுகிறோம் என்பது முக்கியமானது.
இந்த ஐந்து அம்சங்களும் ஒன்றாக இருந்து வேண்டுவோர் மிக குறைவுதான். சரி. இந்த ஐந்தில் முதலாவது பற்றி அறிவோமா ? (அடுத்த பாகம்)