பிரபஞ்ச சக்திகளின் வரிசைக்கிரமம்-1


இந்த பிரபஞ்சத்தில் ஆறு விதமான சக்திகள் உள்ளன. எந்த அளவிற்கு சக்தி சூட்சுமமாக உள்ளதோ, அந்த அளவிற்கு அந்த சக்தியின் தன்மை அதிகரிக்கிறது. 


1. உடலளவிலான சக்தி: இது பொருள் (Material)  தன்மை கொண்டதால் மிகத் தாழ்ந்த நிலையில் உள்ளது. கீழே குறிப்பிட்டுள்ளவை இதில் அடக்கம்:

அ. நோயை குணப்படுத்தும் மருந்துகள் – பாக்டீரியா கொல்லிகள்
ஆ. கொலை செய்ய உபயோகப்படுத்தும் ஆயுதங்கள்
இ. பண சக்தி
ஈ. அரசியல் சக்தி

ஒரு சாதாரண மனிதனிடம் அந்த உடலளவு சக்தியே உள்ளது.
இந்த சக்தியின் பரிமாணம் உடல், மன முயற்சி (ஸ்தூல ) நிலையோடு நின்று போகிறது. உதாரணத்திற்கு, இலக்கை (Goal ) பார்க்க முடியாவிட்டால் ஒரு ஸ்தூல ஆயுதத்தால் அதனை தாக்க முடியாது.

2. ஸ்தூலமும் மந்திரமும்சூட்சும (எளிதில் கண்ணுக்கு தெரியாத) சக்தியை ஸ்தூல சக்தியுடன் இணைத்து செயல்பட வைத்தால், அதனால் ஏற்படும் பலன் மிகுதியானது. பழங்காலத்தில், மந்திரத்தை ஜபித்தபின் அம்பை வில்லிலிருந்து எய்வார்கள். 

அந்த மந்திரத்தால் எதிரிகளின் பெயர் பதிவாவதால், அந்த எதிரி நரகத்தில் ஒளிந்திருக்கும் ஆவியாக இருந்தாலும் அம்பு அங்கு சென்று தாக்கும். அந்த அம்புடன் சூட்சும சக்தி இணைந்து இருப்பதே இதன் காரணம். 

இந்த கருத்துக் கோட்பாடே ஆயுர்வேத மருந்துகளின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. மருந்துகள் தயாரிக்கும்போது மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. 

அதேபோல், ஊசி, கருப்பு உளுந்து, எலுமிச்சை ஆகியவற்றுடன் மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு, ஒருவரை பீடித்துள்ள பேய், பிசாசுகள் விரட்டப்படுகின்றன. 

இருப்பினும், சில சமயங்களில், ஸ்தூல மற்றும் சூட்சும சக்தியை ஒன்று சேர்ப்பினும் பூரண வெற்றி கிடைப்பதில்லை. அந்த சமயங்களில், கீழே கொடுத்துள்ளபடி அதிக சூட்சும சக்தி தேவைப்படுகிறது.

3. மந்திரம் (மட்டும்)அதிக சக்தி வாய்ந்த மந்திரங்களை மாத்திரமே உபயோகப்படுத்தி எதிரிகளை அழிக்க முடியும். மந்திர சக்தியானது, மற்ற உலக விஷயங்களான திருமணம், செல்வம் ஆகியவற்றையும் அளிக்க வல்லது.... தொடரும்....