ஆன்மீக பலனை நாம் உணரும்போது அவைகள் மெய்நிகர் ( virtual ) வடிவத்தில் தான் இருக்கும் !
ஆன்மீக பலத்தை நாம் உணர்வதற்கு இந்த படத்தில் உள்ள ஐந்து அம்சங்களும் அவசியமே.

- தீப ஒளி (நெருப்பு)
- வாசனை திரவியம் (பூமியின் / மண்ணின் விளைவு)
- விண்வெளி மண்டலம் (சூரியனும், கிரகங்களும்)
- காற்று (நம்மை அண்டும் பிரபஞ்சத்தின் தொடர்பு)
- தண்ணீர்.

- இவை ஐந்தும் நமக்கு வெளியேயும் உள்ளது, உள்ளேயும் உள்ளது. பிரபஞ்சத்தின் பிரதிநிதியாக இந்த ஐந்தும் தான் நமக்கு ஆன்மீகத்தின் பலன், பலம் தருகிறது. (ரகசியம்: காற்றில் உள்ள ஈத்தர் தான் நம் உடலையும் பிரபஞ்சத்தையும் இணைக்கும் சூட்சம விஞ்ஞானம். நமது ஆன்மா உள்ளே வருவதும் வெளியே போவதும் இந்த ஈத்தர் (மீடியம்) வழியாகத்தான் ! ஆனால் ஈத்தர் ஆன்மா அல்ல ! நமது ஆன்மாவின் உருவ அளவு நமது தலைமுடியின் முனையைக் (Tip) கிள்ளி அதை பத்தாயிரம் பகுதியாக வெட்டினால் (!) எவ்வளவு வருமோ அதுதான் ஆன்மாவின், உயிரின் அணுவின் உருவம், அளவு).
- இவை ஐந்துமே நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் காரணிகள். இது இரண்டு வகைப்படும். 1. தனி நபரின் கர்மா. 2. நாட்டின், மண்ணின் பொது நிலை. அந்த ஐந்து அம்சங்கள்தான் இந்த இரண்டிற்கும் இடையே சமநிலை .தருகிறது . ஆனால் இவைகள் தரும் ஆன்மீக பலனை நாம் உணரும்போது அவைகள் மெய்நிகர் ( virtual ) வடிவத்தில் தான் இருக்கும் !
