ஏன் மதமும் மத உணர்வுகளும் அரசியலிலும் வியாபாரத்திலும் பங்கு வகிக்கின்றன ? [views 33]

மத உணர்வுகள் நிறைய இருப்போர் 'எனக்கெதற்க்கு அரசியலில் அல்லது வியாபாரத்தில் என்ன நடக்கிறது என தெரிய வேண்டும்?' என்பார்கள். 

ஆனால் அரசியலிலும் வியாபாரத்திலும் இருப்பவர்களுக்கு  மதம் அவர்களது தொழில்களில் என்ன முக்கியத்துவம் தருகிறது என தெரியும். 

உலகில் அரசியல் வியாபாரம் மதம் மூன்றும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்படாத நாடே இல்லை என சொல்லலாம். இவை இரண்டிலும்  தர்ம சிந்தனை நியாயம் ஆகிய சமுதாய கடமைகளை நிறைவேற்ற மதம் பயன்படுகிறது என மட்டுமே நாம் நினைக்கிறோம். அப்படி இல்லை. மதம் தவறாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதைப் பற்றிய காந்திஜியின் கருத்துக்களை இங்கு பாருங்கள்.

எது எதை கட்டுப்படுத்துகிறது அல்லது தவறாகப் பயன்படுத்துவதில் எது முன்னது எது பின்னது என ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால்  மதத்தையும் அரசியலையும் தனது கைகளுக்குள் அடக்க பார்க்கிறது வியாபாரம். இதற்கு வரலாறில் நிறைய நிகழ்ச்சிகள் இருக்கின்றன.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆங்கிலேயர்கள் மற்றும் மற்ற வெளிநாட்டினரும் (தொழில்அதிபர்கள், கம்பெனிகள்) தங்கள் வியாபாரத்தைப் பெருக்க நமது பாரம்பரிய உணவுகள் தொழில்கள் ஆகியன பற்றி இழித்துக் கூறி அவர்களது பொருள்களை நம்மை வாங்கவைத்தார்கள்.   அது வெற்றிகரமாக இல்லாத போது  அரசியலில் செல்வாக்கு வாய்ந்தவர்களை வைத்து அல்லது நமது மதத்தை ஆதரிப்போது போல முறைகளைப் பின் பற்றி தங்கள் கம்பெனிகளை இந்தியாவில் தொடங்கி வளர்த்தனர். இன்றும் இது தொடர்கிறது. 

இங்கு உள்ள கிறிஸ்துவ அமைப்புகளும் கம்யூனிச சிந்தனையும் இந்துக்களையோ அல்லது மற்ற மதத்தினரையோ ஏளனம் செய்வது அல்லது சாடுவது எதற்காக ? இந்துக்களை ஏன் மற்ற மதத்திற்கு மாற்ற இவர்கள் வெறி கொண்டு அலைகிறார்கள் ? வெளி நாட்டில் உள்ள அவர்கள் சமுதாயத்தை சேர்ந்த கம்பெனிகளுக்கு இங்கு வியாபாரத்தை பெருக்கத்தான். தமிழ் நாட்டில் வர வேண்டிய சில கம்பெனிகள் வராமல் போவதற்கு இந்த பின்னணியே காரணம். 

இங்கு உள்ள இந்துக்கள் அவர்களை திட்டுகிறார்கள் அடக்கப் பார்க்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டுகளுமே தாங்கள் அதையே செய்வதற்குத்தான். வேறு எதற்கோ ஓடிக்கொண்டு இருப்பவனுக்குப்  பின்னாலே ஓடும் திருடன் கூட (திருடிவிட்டு தான் மாட்டிக்கொள்ளாமல் இருக்க ) ''திருடன் திருடன் பிடிங்க" என்று கத்திக்கொண்டுதான் ஓடுவான்.  

ஆகவே, உலகிலேயே அதிக ஜனத்தொகையினால் இருக்கும் இந்தியாவின் பெரிய மார்கெட்டுகளை கைப்பற்ற வெளிநாட்டு கம்பெனிகள் தங்கள் மத தலைவர்களையும் அரசியல்வாதிகளையும் பயன்படுத்தி நம்மைக் கொள்ளை அடித்து நமது கம்பெனிகளை, வேலை வாய்ப்புகளை, அபகரிக்க செய்யும் முயற்சிக்கு மதம்-இழிவு  அல்லது மதம்-மாற்றம் எந்த அளவிற்கு பயன்படுகிறது என நாம் அறிந்தால்தான் நமது மதத்தை மட்டும் அல்ல நமது செல்வத்தையும், வேலை வாய்ப்புகளையும், இயற்கை சார்ந்த ஆதாரங்களையும் (காப்பர், நிலக்கரி, சிலிக்கான், போன்றவை) மோசமாகாத காற்று சூழ்நிலைகள் மற்றும் மண், ஆகியவற்றை காப்பாற்ற முடியும். 

மல்டி-நேஷனல் கம்பெனிகள் நமது மக்களுக்கு வேலை வாய்ப்பு தந்தாலும், எவரெடி பேட்டரி கம்பெனி (யூனியன் கார்பைடு) செய்த விஷவாயு கசிவினால் லட்சக்கணக்கான உயிர்கள் 1984 லில் மத்தியப் பிரதேசத்தில் இழந்ததை நாம் மறக்கலாகாது. 

ஆகவே, மத உணர்வு அதிகம் கொண்டவர்கள் நமக்கு எதற்கு அரசியலும் வியாபாரமும் எனவும், அதே சமயம் அரசியலையோ வியாபாரத்தையோ மட்டுமே குறியாகக் கொண்டு நமக்கெதற்கு மத உணர்வு என்றிருப்போர் சிறிது ஆராய்ச்சி செய்து பார்த்து ஒன்றுக்கொன்று ஏன் தொடர்புடையது என தெரிந்து கொண்டால் மட்டுமே நீங்கள் ஒரு நாட்டுப் பற்று உள்ள ஒரு குடிமகன் ஆவீர் . 

- சிந்தனை, ஆக்கம் : சரவணன்.