அருமையான தகவல்கள் எதில் ? சமூகவலையா புத்தகமா ? எது பயன் குறைவு ?

image courtesy: marcguberty.com

image courtesy: marcguberty.co

சமூகவலையில் (வாட்ஸ்அப், ஃபேஸ்புக் , யுட்யூப் போல) எவ்வளவோ விஷயங்களை (நம்மை மாற்றக்கூடிய வை, பிரச்சினைகளுக்கு தீர்வு தருபவை, முதலியவை) நாம் சந்தித்தாலும் அவைகளால் ஏன் நாம் பயன் அடையவில்லை? 😊 

ஒரு புத்தகம் முழுவதும் படித்தால் அதன் பிறகு நாம் என்ன "ஃபாலோ அப்" செய்கிறோம்? நாம் செய்யத் தவறியது என்ன? 😊 

காரணம் : அவைகளை நாம் சந்தித்தோமே தவிர அவற்றுடன் நாம் பழகவில்லை! எவ்வளவு நல்ல தகவலாக இருந்தாலும், சமூக வலையிலும் புத்தகத்திலும் படிப்பது மட்டுமே நம் பழக்கத்தையும் வாழ்க்கை நோக்கத்தையும் மாற்றி விடாது.... என்ன தவறு செய்கிறோம் ? 


image courtesy: i.ytimg.com

  1. படிக்கும் போது, முக்கியமான புள்ளிகளை மனதிலும் நோட்டிலும் குறித்துக் கொள்வதில்லை. 
  2.  படிப்பதில் முழு கவனம் செலுத்துவதில்லை. 
  3.  புத்தகத்தை மீண்டும் இரண்டாம் தடவை விரைவில் வாசிப்பதில்லை.
  4.  படித்த பிறகு அவற்றை மூளையில் நினைவு கூர்வதில்லை (பிடித்த உணவை சாப்பிட்டபின் அதன் சுவை நம் நாக்கிலும் மனதிலும் மீண்டும் ருசித்துக் கொள்வதில்லையா?) 
  5.  முதல் முறை படித்து முடிக்கவே அதிக நேரம் எடுத்துக் கொள்கிறோம் அல்லது முடிக்கவேயில்லை. 
  6.  புத்தகங்களில் படித்த ஒரு ஐடியா அல்லது தீர்வை "இதை நாம் எப்படி பயன் படுத்தலாம்" என அப்போதே (படிக்கும்போதே) யோசிப்பதில்லை.
  7.  புத்தகத்திலிருந்து வரும் கதைகளை நினைவு செய்து நம் வாழ்க்கை செயலுடன் தொடர்பு செய்வதில்லை. 
  8.  புத்தகத்தில் சொன்ன நடைமுறை பயிற்சிகள் அல்லது சோதனைகளைச் செய்யவில்லை. 
  9.  பழைய உருப்படாத பழக்கங்களுக்குத் திரும்பிவிடாமல் இருக்க  நடவடிக்கைகளை தொடரவில்லை. 

💨 மேலே சொல்லப்பட்ட, (நாம் தவறவிட்ட) எல்லாவற்றையும் பயிற்சி செய்தால், சமூக வலை தகவலும் புத்தகமும் நமக்கு அளவில்லா பயன் தந்து விட்டது என பெருமைப் படலாம் !