சத்யசாயி பாபா Sathya Sai Baba Asram Puttaparthi Story

ஆந்திர மாநிலத்தின் எல்லையோர கிராமமான புட்டபர்த்தி இன்று உலகமறிந்த ஊராகிவிட்டது. இடத்தால் மனிதர்கள் சிறப்படை வதில்லை, மனிதர்களால் இடம் சிறப்படைகிறது, அதிலும் அவதார புருஷரான சத்ய சாயி தோன்றிய இடமாயிற்றே அது! சத்யாவின் ஜனனம் 1926-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் நாளில் நிகழ்ந்தது.

அவரைப் பெறுகிற பாக்கியம் கிடைக்கப் பெற்றவர்கள் பெத்த வெங்கப்பராஜு, ஈஸ்வரம்மா ஆவர். அவர்கள் சத்ய நாராயண விரதம் இருந்து பிறந்ததால் குழந்தைக்கு சத்ய நாராயண ராஜு என்று பெயரிட்டனர்

குழந்தை அழகும் கவர்ச்சியும் கொண்டிருந்தது. சத்யா ஒன்பது மாதக் குழந்தையாயிருந்தபோது தாயார் அரைத் தூளியில் உறங்கப் பண்ணிவிட்டு அடுப்பில் பால் காய்ச்சச் சென்றுவிட்டார்.

திடீரென்று குழந்தை யின் அழுகைக்குரல் கேட்கவும் கைவேலையைப் போட்டுவிட்டு ஓடிவந்தார். குழந்தையைத் தூளியிலிருந்து எடுத்து மடியில் போட்டுக் கொண்டார்.

குழந்தை அழுகையை நிறுத்தியது. அப்போது அதன் உடம்பு முழு வதையும் சுற்றி ஓர் ஒளிவட்டம் தோன்றியது.

தாய் ஈஸ்வரம்மாவுக்கு வியப்பு தாங்கவில்லை. பிறந்ததி லிருந்தே அழாத குழந்தை அன்று அழுத்தும், குழந்தை யின் உடம்பைச் சுற்றியிருந்த ஒளிவட்டம் வெகுநேரம் இருந்து இதமளித்ததும் அவரை மெய்ம்மறக்கச் செய்தன.

எல்லாச் சிறுவர்களைப் போலவே சத்யாவும் பள்ளிக்கூடம் சென்றார். அவர் நன்றாகப் படித்தார். அவருடைய அறிவு தெளிவும், திறனும் கொண்டது. சத்யாவைச் சூழ்ந்தபடி சிறுவர்கூட்டம் இருக்கும்.

அவர் திடீரென்று சாக்லெட், மிட்டாய் என்று தின்பண்டங்கள் வர வழைத்து அவர்களுக்குக் கொடுப்பார்.

பக்தி பஜன் சொல்லிக் கொடுத்து அவர்களைப் பாடச் செய்வார். அந்தச் சிறுவர்கள் குழு பாண்டுரங்க பஜனா மண்டலி என்று பெயர் வைத்துக் கொண்டது. அவர்களுடைய பஜனை உள்ளூரில் மட்டுமன்றி பக்கத்து கிராமங்களிலும் ஒலிக்கும்.

அப்போது சத்யாவிற்குப் பதினான்கு வயது. ஒன்ப தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். திடீரென்று ஒருநாள் பள்ளியிலிருந்து வீடு திரும்பியவர் புத்தக மூட்டையை ஒரு பக்கம் வீசிவிட்டு, வெளியிலேயே உட்கார்ந்தார்.

என் கடமை என்னை அழைக்கிறது. எனது பக்தர்கள் எனக்காகக் காத்திருக்கிறார்கள்’ என்றபடி எழுந்தார். அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள குன்றை நோக்கி நடந்தார்.

ஷீர்டி பாபாவின் மறு அவதாரம்

ஊர் மக்கள் அவர் பின்னே சென்றனர். சத்யா குன்றின் மேலுள்ள ஒரு பாறையில் அமர்ந் தார். சற்றே வியப்பும், அச்சமும் கலந்த பார்வையுடன் தம்மைச் சுற்றி நின்ற கூட்டத்தைப் பார்த்தார்.’நான் ஷீர்டி பாபாவின் மறு அவதாரம்.

உங்களுக் கெல்லாம் நன்மை செய்யவே மீண்டும் இங்கே பிறந்து வந்தேன். உங்கள் இல்லங்களையும், உள்ளங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்’ என்றார்.

அன்று அவர் உரைத்ததையும், அவர் யாரென்பதை யும் மக்கள் உணர்ந்தார்களோ இல்லையோ பின்னாளில் அந்த ஞானவடிவை உலகம் முழுமையாய் புரிந்து கொண்டு விட்டது.

தமது அவதார அறிவிப்பை அவர் நிகழ்த்திய நாள் 1940 ஆம் ஆண்டு அக்டோபர் 20-ஆம் நாள் ஆகும். பாபாவின் சலியாத உழைப்பின் பயனாய் இன்று புட்டபர்த்தியில் பல்கலைக்கழகம், மருத்து வமனை என்று நிறுவனங்கள் உருவாகியுள்ளன.

உலகம் முழு திலும் சேவை நிலையங்கள், ஆன்மிக மையங்கள். இன்று புட்டபர்த்தி கிராமம் அல்ல. நவீன தகவல் தொழில்நுட்பங்கள் கொண்ட ஒரு நகரமாகிவிட்டது. பாபா ஆன்மிகத்தை மட்டும் வளர்க்கவில்லை.

மக்களின் அறிவை வளர்க்கும் கல்வி  நற்பணியையும், குடிநீர்த் திட்டம் போன்ற நலம் பயக்கும் காரியங்களையும் இலவசமாக செய்து வருகிறார். ஒவ்வொன்றும் பலநூறு கோடித் திட்டங்கள்.

பாபா தனிப்பட்ட முறையிலும் ஆயிரமாயிரம் பக்தர்கள் வாழ்வில் அற்புதங்கள் நிகழ்த்தியிருக்கிறார். அவர் அலைபாயும் மனங்களுக்கு அமைதி கிடைக்கச் செய்திருக்கிறார்.

நிலை தடுமாறியவர்களை வாழ்க்கை யில் நிமிரச் செய்திருக்கிறார். தீயவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்தியிருக்கிறார்.

‘ஒவ்வொரு மனிதனையும் அவனுள்ளிருக்கும் தெய் விகத்தை உணரச் செய்வதுதான் தன்னுடைய அவதார நோக்கம்’ என்பார் பாபா. அது அவருடைய உழைப்பில் தெரிகிறது. மனித குலத்துக்கான அவரது தொண்டு தொடர்கிறது.