பூர்ணாலயம் : வேதம் உபநிஷத் : 1 கர்மயோகம்
இணைய தளம் : https://www.poornalayam.org/classes-recorded/
(வீடியோ பார்த்து தெரிந்து கொண்டவைகளை
எனக்கு நினைவு படுத்தவே இந்த குறிப்புகள் )
1. கர்மயோகம் :
ஆடியோ 1 :
மனிதன் எதை நாடுகிறான் ? மனிதனாக இருக்க அறிவையே நாடுகிறான். மனிதன் மட்டுமே மாறக்கூடியவன் . மற்ற உயிரினம் மாற முடியாது. ஆடு மாடு எதுவாக இருந்தாலும் அது இப்படிதான் இருக்கும் என நாம் சொல்ல முடியும். ஆனால் மனிதனை பற்றி அப்படி சொல்லவே முடியாது. தான் யார் என்ற தன்னைப் பற்றிய அறிவு, எது தர்மம் , எது உண்மை என்பது. தான் பொய் சொன்னாலும் மற்றவரிடம் உண்மையை தேடியே அலைகிறான். மனிதனிடம் மாற்றம் வர காரணம் அறிவு தேடல் தான். அறிவு மனதுக்கு பாவனையாக சென்று மனது அதை சீர் படுத்தி கட்டளை இட்ட பின்பே செயல் உருவாகிறது. நாய் பந்தயத்தில் நாய்க்கு முன் ஒரு இயந்திர முயல் செல்வதால் தான் நாய்கள் அதை துரத்துகின்றன. நாய்க்கு இந்த ரகசியம் தெரிந்த பின் முயலை எப்போதுமே சாப்பிட முடியாது என்ற அறிவு வந்தவுடன் துரத்துவதில்லை. பரிசு வெல்லாததால் நாயின் எஜமானன் நாயை துரத்திவிட்டான். நாமும் அந்த நிலைக்கு வந்த பின் ஸந்யாஸி ஆகி விடுவோம். ஆனால் அறிவை நாடுதல் மனிதனின் முதல் கடமை. எதை அறிய வேண்டும் ? எப்படி சம்பாதிக்க வேண்டும் என்ற அறிவு இருக்கும்போது எப்படி செலவு செய்ய வேண்டும் என்ற அறிவை யாரும் சொல்லி தருவதில்லை. அது போல, தேவையான அறிவையே நாட வேண்டும்.
ஆடியோ 2 : கர்ம யோகா விசாரம்:
முதலில் நமது வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்று தெரிய வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும். மோக்ஷம் என்பது கடைசி இலட்சியம். அதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ள போவதில்லை. குறிக்கோள் தெரியாமல் , வாழ்வதற்கு தேவையானதை நாடுவதையே வாழ்க்கையாக கொண்டு உள்ளோம். நமது இலட்சியத்தை காட்டுவதே வேதங்கள் ஆகும். முதலில் கர்மகாண்டம் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது கர்மயோகம். கர்மம் மற்றும் யோகம் என்றால் என்ன ? கர்மம் என்பது நம்மிடம் இருந்து மூன்று ஆதாரம் வழியே ஏற்படும்: காயிகம், வாசிகம், மானசம். அதாவது, மனம் உடல் மூளை வழியே. கர்மத்தை சாதனையாக (achievement) செயல் படுத்துவதே கர்மயோகம். அதன் ஸ்பாவம் என்ன ? அதாவது நாம் ஆசைகளை பூர்த்தி செய்வது. அதுவே பிறகு ஆசையை வளர்க்கிறது. அதுவே பின் விருப்பு வெறுப்பு சலிப்பு என உருவாகிறது. இவையே நாம் வாழ்வை சக்கரம் போல சுற்றுகிறது. இதில் இருந்து வெளியே வர , அதே கர்மாவை பயன்படுத்துவதே கர்ம யோகம் எனலாம்.
கர்த்தா என்பவர் கடமையை செய்பவர். கர்த்தாவின் இலட்சியம்: கர்மாக்களை செய்யலாம். கர்மா எவ்வளவு அக்கறை எடுத்து செய்தாலும், பலனை எதிர்பார்த்து செய்யப் படுவதில்லை. கர்மாவுக்கு முன் செய்யும் சங்கல்பம் அதற்கு தகுந்தாற் போல பலனை கொடுக்கும். கர்மாவை தவிர்ப்பது - அதாவது நிவ்ருத்தி - கூடாது, பலன் எப்படி இருக்குமானாலும் கர்மாவை தவிர்த்தல் ஆகாது.
தொடரும்.

