பூர்ணாலயம் -10: வேதம் உபநிஷத்-கீதை



(சுருக்கமான விளக்கமும், சமஸ்க்ரித வார்த்தைகளும்)
(ஆடியோ கேட்டு தெரிந்து கொண்டவைகளை 
எனக்கு நினைவு படுத்தவே இந்த குறிப்புகள் )

கூடுதல் குறிப்பு : நாம் தெரிந்து கொண்டதை மற்றவருக்கு சொல்லும்பொது சமஸ்க்ருத வார்த்தையை சேர்த்து சொன்னால் கருத்துக்கு  மதிப்பு அதிகம். ஆகவே ஒரு கருத்தின் தலைப்பை (ஒரு சில வார்த்தைகள் மட்டும்) சமஸ்கிருதத்தில் நினைவு வைப்பது நல்லது; (வாக்கியத்தை அல்ல, அது நம்மால் முடியாது)
கூடுதல் குறிப்பு நேற்றைய கட்டுரையை மீண்டும் இப்போது படித்துவிட்டு வந்தால் இன்றைய கட்டுரை நன்றாக புரியும். 

    நாம் படிப்பது நிஷ்காம பக்தி பற்றி - மனோ பலம், மனோ பக்குவம் , மன சுத்தி ஆகியவையே பக்தியின் பலன் - பக்தன் அதர்மவான் ஆக இருக்க முடியாது/கூடாது. - டிராஃபிக் சிக்னலை ,அந்த இடத்தில், போலீஸ் இருந்தால் மட்டுமே மதிப்பது தர்மம் ஆகாது. - இன்னொரு பலன் : பக்தியானது  செயல் ஆக வெளிப்பட்டால் அது ஒரு கர்மம், அது புண்ணியமாக மாறி பலன் தருகிறது - 

    புண்ணியம் எப்படி வேலை செய்கிறது ? பிராராப்தம் = தானாக நடக்கும் செயல்களில் நல்லவை  , துர்பலா பிராராப்தம் = அதில் கெட்டவை -  இப்போது நாம் செய்யும் கர்ம வினை பிறகு வரப் போகும் துர்பலா பிராராப்தத்தை மாற்றி விடும். - அம்மாதிரி கர்ம வினை செயல்களை செய்ய பக்தி வரவழைக்கும் - 

    நிஷ்காம பக்தன் எப்படி அடுத்த நிலை அடைகிறான் : விஸ்வரூப பக்தன் -
இறைவன் உபாதான காரணம் என்பதை உணர்ந்தவன். - உபாதனம் என்பது மூலபொருள் (ஏற்கனவே பார்த்த எடுத்து காட்டு: களிமண் அல்லது தங்கம் போன்ற எதுவாகிணும்) அதாவது எந்த பானையை பார்த்தாலும் நமக்கு களிமண்ணாக பார்க்க வேண்டும் ; ஆகவே உலகை இவ்வாறே , உலகம் ஒரு களிமண் , குயவனால் அதில் பாத்திரம் செய்யப் பட்டது என்று உணரபவனே விஸ்வரூப பக்தன்.- அதாவது களிமண்ணும் அவனே, குயவனும் அவனே என அறிந்தவன். தன்னை அழித்து கொள்ளாமல் உலகை உருவம் செய்து அதன் மேல் இருப்பவன். 

    இந்த விஸ்வரூப பக்தன் எப்படி பக்தி செய்வான் ? - ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் மலரும் ஒன்றே அர்ச்சனை செய்யப்படும் இறைவனும் ஒன்றே என உணர்ந்தவரால் பிறகு வித விதமாக பூஜை முடியவில்லை - இந்த எண்ணத்தை நாம் தொடர்ந்து கடைப் பிடித்தால் விஸ்வரூப பக்தன் ஆகி விடுவோம் - பூஜை செய்யும் பொது மட்டும் அல்ல, எப்போதும். சாதாரண பக்தன் இரண்டு மனத்தால் உயிர் வாழ்வான் கர்மம் செய்வான். ஆனால் விஸ்வரூப பக்தன் அப்படி இல்லை - அதாவது தனது எதிரியை கூட இறைவனாகவே காண்பான். ஸ்தூலமாக வணங்க மாட்டார்கள் - 

    விஸ்வரூபன் எப்படி பலன் அடைகிறான் ? - தனது சக்தியே இறைவனது சக்தி என உணர்வான், கர்வம் வராது - ஆணவம் வராது - பகவத் கீதை விபூதி யோகத்தில் நான் நல்லவனாகவும் இருக்கிறேன் கெட்டவனாகவும் இருக்கிறேன் என ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார் - இதை விஸ்வரூபன் உணர்வான் - இந்த உணர்வால் பொறாமை இவனிடம் அண்டாது. -  விஸ்வரூபன் தனக்கு வைக்கப்பட்ட பெயரின் அம்சத்தை உணர்வான் அதன் குல தெய்வத்தை உணர்வான் ; 

நிற்குண பக்தன் : விஸ்வரூப பக்தன் இவனது அந்த நிலையில் இவன் தவறு செய்வான் ; அதாவது தான் மட்டுமே பக்தன், மற்றவர் அனைவரும் இறைவனின் அம்சம் என தவறு செய்வான் - தனக்கும் இறைவனுக்கும் நடுவில் அன்பு பிளவு பட்டுவிடும்.  அதை உணர்ந்து விட்டால் அவன் நிற்குண பக்தன் ஆகி விடுவான். 

ஞானி அல்லது பராபக்தன் : தானே இறைவனின் ஆத்மரூபம் என உணர்வான் -இதுவே பக்தியின் உச்ச நிலை - இந்த அறிவின் பலன் என்ன ? அதுதான் சாத்திய பக்தி , எந்த அன்பு எவ்விடத்திலும் பிளவு படவில்லையோ அது. - தன் மீது எவ்வளவு அன்பு உள்ளதோ அதே அளவு எல்லாரிடத்திலும் இருக்கும் - ஆனால் இந்த ஞானியை மற்றவர் அறியாவிட்டால் அவருக்கு துயரம் தரமாட்டார்களா ? இவனுக்கு துயரம் தரும் சக்தியை இந்த உலகம் இழந்து விட்டது -  இவனிடம் இருமை இல்லை அத்வைதம் தான் உள்ளது - கடவுள் வேறு இவன் வேறாக இல்லை - ஆகவே உலகம் கடவுளுக்கு துன்பம் தர முடியாது - இவன் அஹிம்சா ரூபம் - அதனால் இவனுக்கு யாரும் துயரம் தர முடியாது - அன்பே சிவமாய் இருப்பான் - இருக்கும்வரை இவன் மகிழ்ச்சியாக இருப்பான் - இவனுக்கு மறு பிறவி இல்லை . அடுத்தது