பூர்ணாலயம்-12 : வேதம் உபநிஷத்-கீதை



(சுருக்கமான விளக்கமும், சமஸ்க்ரித வார்த்தைகளும்)
(ஆடியோ கேட்டு தெரிந்து கொண்டவைகளை 
எனக்கு நினைவு படுத்தவே இந்த குறிப்புகள் )

கூடுதல் குறிப்பு : நாம் தெரிந்து கொண்டதை மற்றவருக்கு சொல்லும்பொது சமஸ்க்ருத வார்த்தையை சேர்த்து சொன்னால் கருத்துக்கு  மதிப்பு அதிகம். ஆகவே ஒரு கருத்தின் தலைப்பை (ஒரு சில வார்த்தைகள் மட்டும்) சமஸ்கிருதத்தில் நினைவு வைப்பது நல்லது; (வாக்கியத்தை அல்ல, அது நம்மால் முடியாது)
கூடுதல் குறிப்பு : நேற்றைய கட்டுரையை மீண்டும் இப்போது படித்துவிட்டு வந்தால் இன்றைய கட்டுரை நன்றாக புரியும். 


மோக்ஷத்தை சாதனையாக வைத்தவன் ஆன்மீகவான், தர்மப்படி இன்பம் எய்தியவன் மதவான் ஆவான். தர்மத்தின் இரண்டாவது பயன் நம்மை தத்துவத்திற்கு செல்வது. முதலவன். விஷயீ என்பது தர்மம் சேர்ந்த மதத்தில் உள்ளவன். இரண்டாமவன் விவேகி . தத்துவத்திற்கு மதம் வழியாகத்தான் வரமுடியும், ஏனென்றால் தர்மம் இல்லாத மதம் இல்லை. மேல்நாட்டில் தத்துவம் படிக்க மதம் எதற்கு என்பார்கள். அது நடக்காது. தருமம் சேராமல் எந்த தத்துவமும் ஆராய்ச்சி செய்ய முடியாது. 

இன்பத்தை நாம் புண்ணியத்திற்காக நாட தர்மத்தின் துணை கொண்டோம். தர்மம் நம்மை அறியாமலே நமக்கு விவேகம் என்னும் அறிவை தருகிறது. அதனால் விஷயீ என்பவன் விவேகி ஆகிறான். அதாவது எது நித்யம் அது அநித்யம் என்பதை அறிந்தவன். விவேகத்தின் ஒவ்வொரு படிக்கும் நம்மை கூட்டி செல்வது தர்மமே. 

ஆடியோ 2

விவேகி வைராகி ஆகிறான். அதாவது  விவேகம் பழுத்தால் வைராக்கியம் ஆகிறது. இன்பத்தை விட மோக்ஷம் தான் நிலையானது என்பது தெரிய வந்தாலும் அதை விட அல்லது மாற்ற சில காலம் பிடிக்கும். புகை பிடிப்பது மிகவும் கெடுதல் என முதலில் தெரியாமல் பிறகு தெரிந்தும் மாற முடியாதது போல. பொய்யில் இருந்து விலகுவதே வைராக்கியம். விவேகி சிறிது காலத்திற்கு பின்னரே வைராகி ஆவான். ஆனால் வெளியில் ஊர் சுற்றிவிட்டு திரும்பி நம்மிடம் வந்து சேர்ந்த வைராக்கியம் மீண்டும் வெளியே செல்லப் பார்க்கும். இந்த சமயத்தில் நமக்கு சில பயிற்சி தேவை. இதற்கு அவன் யோகி அல்லது ஷாந்தஹ ஆக வேண்டும். நிலையற்ற தன்மையில் இருந்து நிலையான தன்மைக்கு வர முயற்சி தேவை. 

இதற்கு சில சாதனைகளின் துணை கொண்டு நாம் ஞானத்தை அடைவோம் - ஞானி ஆகிறான். ஞானியாவது என்பது மூன்று மாதம் ஊற வைத்து பயன்படுத்தும் ஊறுகாய் போன்றது. சரியான முயற்சி சரியான அறிவு துணை கொண்டுதான் ஞானம் பெற முடியும். எந்த நிலையிலும் அறிவை விட்டு விடமுடியாது. எந்த நிலையில் நாம் இருக்கிறோம் என தெரிந்து கொண்டு அதற்கேற்ற பயிற்சி பெற்றால் தான் ஞானம் பெரும் நிலை அடைய முடியும். எல்லோரும் எல்லா நிலைகளிலும் இருந்து தான் மேலே வர வேண்டும். பாதை: விஷயீ > விவேகி (கர்மயோகம்) > வைராகி > யோகி > ஞானி > ஞான நிஷ்டை ; குருவிடம் சென்று வேதாந்தம் விசாரம் செய்ய வேண்டும். NEXT