பூர்ணாலயம்-17 : வேதம் உபநிஷத்-கீதை : யாருக்கு விடுதலை
இணைய தளம் : https://www.poornalayam.org/classes-recorded/
(சுருக்கமான விளக்கமும், சில சமஸ்க்ரித வார்த்தைகளும்)
(ஆடியோ கேட்டு தெரிந்து கொண்டவைகளை
எனக்கு நினைவு படுத்தவே இந்த குறிப்புகள் )
கூடுதல் குறிப்பு : நேற்றைய கட்டுரையை மீண்டும் இப்போது படித்துவிட்டு வந்தால் இன்றைய கட்டுரை நன்றாக புரியும்.
தலைப்பு : யாருக்கு விடுதலை ?
ஆடியோ -1 (ஆடியோ லிங்க்)
தலைப்பு ஆராய்ச்சி : யார் பந்தத்தில் (ஆசை மோகம் கோபம் .... ) உள்ளார்களோ அவர்களுக்கு - தாம் பந்தத்தில் உள்ளோம் என்பது தெரிந்தவருக்கு விடுதலை - விடுபட வேண்டும் என்ற ஆசை - விடுதலை பற்றி தீவிர சிந்தனை முயற்சி தேவை - ஆசையுடன் கூடிய அறிவு தேவை -
"பிரமாணம்" : வேதம் என்பது அறிவை கொடுக்கும் கருவி. - வேதம் என்றால் ரகசியம் எனவும் வைக்கலாம். - எதை நாம் பகிரவில்லையோ அது அழிந்து விடும் என்ற ரகசியத்தை வேதம் சொல்கிறது. தகுதி இல்லாமல் வேதம் அறிந்தால் அது எப்போதும் பயன் படாது. தர்மம் , பிரம்மம் இரண்டையும் ரகசியமாக சொல்கிறது. - எப்போதும் இன்பத்தை நாடுகிறோம் - இன்பத்தை கொடுப்பது புண்ணியம் தான் - பாபம் துன்பத்தை அளிக்கிறது - இன்பம் தன்னால் தேடி கிடைத்தது எனவும் துன்பம் தானே வந்தது எனவும் தவறாக நினைக்கிறோம் - புண்ணியத்தை இன்பம் அனுபவிக்கவே பயன் படுத்துகிறோம் - ஆனால் அதைக் கொண்டு ஞானம் பெற எண்ணுவதில்லை ; அதே போல பாவத்தை கொண்டும் மனத்தூய்மை ஞானம் பெற தவறி விடுகிறோம். -
இது தெரிந்தால் புண்ணியம் எப்படி சேர்ப்பது என்ற ஆசை வரும் - மூன்று வித அறிவு பெற்று ஆசையை தூண்டி செயல் செய்தால் புண்ணியம் வரும் - முதலில் தர்ம ஞானம், பொறாமை இன்மை, அகிம்சை போன்ற பண்புகள் - பின்பு கர்மம் - பின்பு தியானம் / உபாசனம் வழியே புண்ணியம் சேர்க்கலாம் - புண்ணியத்தை பிரேயஸ் என்ற இன்பத்திற்கும், ஷ்ரேயஸ் என்ற சித்த சுத்தி அல்லது மனத்தூய்மைக்காக பயன் படுத்தலாம் -
இரண்டாவது ரகசியம் : பிரம்மம் / மெய்ப்பொருள் அறிதல் : (ப்ருஹதாரணியக உபநிஷத்) : ஒருவன் (தான் வெறும் ஆன்மா அல்ல) தன்னை தான் பரமாத்வாக இருக்கிறேன் என அறிய முடிந்தால், எதற்கு யாருக்கு ஆசைப்பட்டு தனக்கு துயரம் கொள்வான் !! இந்த ஞானம் வந்து விட்டால் நீ துயரம் அடைய மாட்டாய்.
ஆடியோ - 2 லிங்க்
பந்தத்தில் இருந்து விடுதலை என்றால் எது பந்தம் - பந்த ஸ்வரூபம் - என அறிதல்; பந்தம் = சம்சாரம் ; வெவ்வேறு வயதில் வித விதமான பொருள், பந்தம், சூழ்நிலை, தேடி அலைகிறோம் - இன்பம் துயரம் இரண்டும் ஒரு இடத்தில் இருந்தே வருகிறது - அது வேண்டாம் என்றால் இல்லாமல் இருக்க முடியவில்லை - மனிதன் சேர்ந்து தான் வாழ வேண்டி உள்ளது , தனியாக வாழ முடியாது - பந்தத்தை துயரம் இல்லாமல் தாங்க கற்று கொள் - வாழ வேண்டிய வயதில் இதை (வேதாந்த சாஸ்திரம்) அறிய வேண்டும் - வயதாகி வரும் ஞானத்தால் வாழ்க்கைப் பயன் இல்லை, ஆனால் மோட்ச பயன்தான் உண்டு - வாழ்க்கையின் இலட்சியம் பந்தங்களில் இருந்து விடுதலை என்பதை அறிந்து இருத்தல்.
இந்த பந்தங்களின் காரணம் என்ன ? பந்தஹேது - எது மூல காரணம் என படிப்படியாக அறிய வேண்டும் - அவைகள் நம்மை சுற்றியுள்ள பொருள், சூழ்நிலை, மனிதர், போன்றவை - எதனுடன் நமக்கு சம்பந்தம் உள்ளதோ அதனால் தான் பந்தம் உண்டாகும் - இவை தவிர, நமது மனமும் எண்ணமும் கூட - இந்த மனத்தால் தான் நமக்கு சம்பந்தம் வருகிறது - மனமும் முழு காரணம் இல்லை, ஆனால் மனது ஒவ்வாத ஒன்று மனதில் நுழையும்போது பந்தம் என்ற துயரம் வருகிறது - கயிரை பாம்பு என்று நினைப்பது - அக்ஞானம், அதன் காரணம் அறியாமை -
அறியாமை பற்றிய அறிவு : இருள் பொருளை மறைக்கிறது போல - அறியாமை அழிக்காது , மறைக்கும் - அறியாமைக்கு விரோதி ஞானமே - NEXT

