பூர்ணாலயம்-21 : வேதம் உபநிஷத்-கீதை: வேத நெறி
பூர்ணாலயம் : வேதம் உபநிஷத்-கீதை
இணைய தளம் : https://www.poornalayam.org/classes-recorded/
ஆடியோ கேட்டு முடித்த பிறகு, எனக்கு நினைவு படுத்த, அதன் முதல் அறிமுகம் மற்றும் இறுதி மதிப்பாய்வு பகுதியில் இருந்து மட்டுமே இங்கு குறிப்பு எடுக்கிறேன்.)
தலைப்பு : வேத நெறி ஆடியோ -1
ஸ்ருதி (காது வழியாக கேட்டு சொல்லப் பட்டது) - ஸ்மிரிதி என்பது அதையே ரிஷிகள் சொன்னது - புராணம்: வேதத்தை ஒட்டிய நிகழ்வுகள் கதையாக வடிவம் அடைந்தவை ; இதிகாசம்: வேதப்படி எப்படி நடந்ததோ அப்படி - வாழ்வின் இலட்சியம் வேதத்தில் இருந்து இவைகள் மூலமாக வாழ்வின் இலட்சியத்தை கற்று தெரிந்து கொள்ள வேண்டும் - மனித சரிரம் எடுத்து எதை அடைய வேண்டுமோ அதை அடையாமல் இருப்பது சந்தன கட்டையை அடுப்பு எரிக்க வைப்பது போலதான் ; வேத சாஸ்திரம் வாழ்க்கை வாழ்ந்து முடிந்தவருக்கு அல்ல - வாழ ஆரம்பித்தவருக்கு - சாஸ்திரம் படித்து விட்டு அதன் படி செல்லாதவனுக்கு அது ஜீரணம் ஆகாத உணவு போல -
1. அடிப்படை தேவையை (அர்த்தஹ) பூர்த்தி செய்த பின், 2. முதலில் சுகத்தையும் (பிரேயஸ்), 3. பிறகு நன்மையையும் (ஸ்ரேயஸ்) நாடுகிறான். பொருள் வரவு இன்பம் தராது, அதை அனுபவிப்பதே இன்பம் தரும், அந்த அனுபவத்தை தருவது புண்ணியம் தான் - பொருள், இன்பம் இரண்டும் புண்ணியத்தால் கிடைக்கிறது. தர்மத்தால் (விதியுடன் கர்ம வாழ்வு) புண்ணியம் சம்பாதிக்கப் படுகிறது. இது ஒரு கால சக்கரம் : செயல் > தர்மம் > புண்ணியம் > இன்பம் > செயல் > தர்மம் இவை ஒரு சக்கரம் , சம்சாரம் - வேத நெறி இல்லாமல் இருக்கும்போது இன்பங்களை (பணம், புகழ், அழகு, அறிவு, சரீரம்) பயத்துடன் அனுபவிக்கிறோம். வேத நெறி தெரிந்த பின், வைராக்கியம் மட்டுமே அபயம் , மற்றவை எல்லாம் பயம் கொண்டது. மோக்ஷம் என்பது அபயம் (protection). பிரேயஸ் நீங்கினால், ஸ்ரேயஸ் கிடைக்கும். பிரேயஸ் என்னும் அடிப்படை தேவைகளை வேதம் (பக்தி, பூஜை, யாகம் போன்றவை) தருகிறது ஆனால் இந்த ஸ்ரேயஸ்-ஐ தருவது வேதாந்தம் ; அதை பெறுவதே (வேத நெறி) வாழ்வின் இலட்சியம்.
வேத நெறி ஆடியோ -2
எதை அடைந்து அதற்கு மேலே வேறு எதுவும் விரும்ப வில்லையோ அதுவே ஸ்ரேயஸ் - ஆசை அடைந்து இதை பெற வேண்டும் - அதற்கு தகுதி , யோக்யதா, உள்ளதா என ஆராய வேண்டும் - தகுதி இல்லாத அறிவு பயன் தராது - வேதாந்தம் பழக என்ன தேவை ? சிறந்த அறிவு, துணிவு, தியாகம் - இருக்க கூடாதது: எல்லோர் மனத்திலும் உள்ள தோஷம் : தவறான பாவனை, சஞ்சலமான மனது, அறியாமை - இருந்தால் ஸ்ரேயஸ் வராது - வேதம் இதற்கேற்ற வாழ்க்கை முறையை அமைத்துக் கொடுக்கிறது. படிக்கிற காலம் ஆரம்பம் வரும் வரை அவனுக்கு எந்த பாவமும் இல்லை - தாய் தந்தை சொல்வதை விட செய்வதையே பிள்ளை பின்பற்றுகிறது - இல்லறத்தில் இருப்பவர் யக்ஞம் (பக்தி, அறிவு), தானம், தபஹ (இன்பத்தில் இருந்து விலக்கம்) மூன்றையும் பழக வேண்டும் - வானப்ரஸ்தம் : ஓய்வு, தபம், மௌனம் முக்கியம் - சன்யாசம் : ஞானம் பிரதானம் - மனம் சமநிலை அடைவது வேதாந்தம் அறிய அவசியம் - மனசோர்வு நீங்க பக்தி அவசியம் - பக்தி இல்லாத தியானம் பலன் பெற வெகு நாள் ஆகும் - ஷ்ரேயஸ் தகுதி பெறுவது கடினம் - தகுதிக்கு பிறகு பயிற்சி செய்தால் இலட்சியம் அடைவது சுலபம் - மனதை தூய்மை படுத்தி , தெளிவு படுத்தி, வெளிச்சம் வர விட்டால் ஷ்ரேயஸ் தகுதி கிடைக்கும்.

