பூர்ணாலயம்-22 : வேதம் உபநிஷத்-கீதை

பூர்ணாலயம் : வேதம் உபநிஷத்-கீதை-


ஆடியோ கேட்டு முடித்த பிறகு, எனக்கு நினைவு படுத்த, அதன் முதல் அறிமுகம் மற்றும் இறுதி மதிப்பாய்வு பகுதியில் இருந்து மட்டுமே இங்கு குறிப்பு எடுக்கிறேன்.)


தலைப்பு : வேத நெறி ஆடியோ -3 

ஆத்மஞானம் என்பது இறைவன் பற்றிய அறிவு அல்லது ஷ்ரேயஸ் அல்லது  மோக்ஷம்  ; சாஸ்திரத்தில் இருந்து அடையப் படுவது ; சாஸ்திரம் நமக்கு உலகத்தை பார்க்கும் அறிவு தருகிறது. அனைத்தும் ஒன்றால் ஆன சர்க்கரையால் செய்யப்பட்ட பல இனிப்பு ஒன்றே என்ற அறிவு. அந்த அறிவுக்கான தகுதியை சாஸ்திரம் தருகிறது ; 

ரிஷிகேஷ் என்ற அறிவு ரிஷிகேஷ் கூட்டி செல்லாது ; எந்த ஒரு பொருளும் நம்மை அதை அடைய  வைக்காது ; அவ்வாறு ஞானம் எப்படி மோக்ஷயத்தை அடைய வைக்கும் ?  சாத்திய வாஸ்து, சித்த வாஸ்து : இல்லாததை அடைதல், இருப்பதை அடைதல் ; இருப்பதை ஏன் அடைய வேண்டும் ; அது நம்மிடம் இல்லை என தவறாக நினைத்ததால் ; 

அறிவு இருந்தால்தான் ஞானம் வரும். ஆனால் ஞானம் பெற சாதனை செய்ய வேண்டும். ஞானம் + தகுதி இருந்தும் சமமாக வர வேண்டும். இருந்தும் முக்கியம்.  அறியாமையினால்  பிரம்மத்தை அடைய இயலாவிடில் ஞானத்தால் அடைய வேண்டும் ; ஞானத்தை எப்படி அடைதல் ? 

ஞானத்தை கொடுக்கும் கருவி என்ன ? பிரமாணம் என்பது அறிவை கொடுக்கும் கருவி ; வேதாந்தம் தான் கருவி ; குருவின் துணை கொண்டு வேதாந்தம் அறிய வேண்டும். 

உபநிஷத் என்ன அறிவை தருகிறது ? உலகம் காரியம்; கடவுள் காரணம் ; களிமண் பானையில் நிமித்த காரணம் (அறிவு) குயவன், களிமண் உபாதான காரணம் ; உலகத்தின் இரண்டு காரணமும் கடவுளே ;  நாம் யார் ? நாம் என அறிபவன் யார், அறியப்படுபவன் யார் ? நாம் உடலின் மனம் மற்றும் ஆன்மா போல உலகத்தின் பரமாத்வாவை அலசினால், கடவுளின் உபாதான காரணம் மாயை ; மாயை நீக்கினால் கடவுள் அறிவு சொரூபம் ; அஹம் பிரஹ்மாஸ்மி ; தத்வமசி ; அறிவு சொரூபம் ஆன நான் என் உடலையும் மனதையும்  பிரகசப் படுத்துகிற ஆத்மா ; அதே போல உலகத்தில் உள்ள எல்லா உடல், மனதையும் பிரகாசப் படுத்துகிறேன். ஆகவே எந்த ஜீவ ராசியையும் என்னால் வெறுக்க முடியாது ; இந்த ஞானத்தினால் பொறாமை வெறுப்பு ஆகியவை அழிக்கப்படும்.