பூர்ணாலயம் -4: வேதம் உபநிஷத் : பக்தியோகம்


(சுருக்கமான விளக்கமும், சமஸ்க்ரித வார்த்தைகளும்)
(ஆடியோ கேட்டு தெரிந்து கொண்டவைகளை 
நினைவு படுத்தவே இந்த குறிப்புகள் )

கூடுதல் குறிப்பு : சமஸ்க்ருத வார்த்தையை சேர்த்து சொன்னால் கருத்துக்கு  மதிப்பு அதிகம். ஆகவே ஒரு கருத்தின் தலைப்பை (ஒரு சில வார்த்தைகள் மட்டும்) சமஸ்கிருதத்தில் நினைவு வைப்பது நல்லது; 
நேற்றைய கட்டுரையை மீண்டும் இப்போது படித்துவிட்டு வந்தால் இன்றைய கட்டுரை நன்றாக புரியும். 


ஆடியோ -1 

        பக்தியோகம் எல்லோரும் சொல்வது போல எளிதானது இல்லை. என்னில் இருந்தே பக்தி வருகிறது என ஸ்ரீகிருஷ்ணா சொல்கிறார். பக்தியோகத்தில் பக்தியே  பாதையாகவும், அடையும் குறிக்கோளாகவும் இரண்டு விதமாக செயல் படுகிறது. பக்தியும் அன்பை போல தொடுதல் சார்ந்த உணர்வு தான். 

மனிதனுக்கு தனக்கு என்ன வேண்டும் என்பதே தெரியாது. ஆனால் அன்பு வேண்டும் என்பது எல்லோரும் அறிந்தது. பக்தியும் அது போலவே. கடவுள் தன்னை விரும்ப வேண்டும் என நினைக்கிறான். ஆனால் பக்தியோகம் சொல்வது என்னவென்றால், கடவுள் உன்னை விரும்பினால் தான் உனக்கு பக்தியே வரும் என்பது தான். குருடர்கள் " "கோவிலுக்கு போனால் நாங்கள் கடவுளை பார்க்க முடியாது, ஆனால் அவர் என்னை பார்க்க முடியும் என்பதால் அங்கு செல்கிறோம்" என சொல்கிறார்கள் !! 

        தேவையான அறிவு இல்லாமல் பக்தி வராது. ஒருவரிடம் நாம் விருப்பம் கொள்வது அவரைப் பற்றி நாம் நிறைய அறிந்ததால்தானே ? பக்தியும் அது போல தான். நிஜானம் என்பது.  பக்தியே பாதையாக பக்தியை அடைய செய்கிறது. ஸ்ரீகிருஷ்ணரிடம் இருந்த நட்பு அல்லது பாசம் அர்ஜுனனுக்கு எப்போது பக்தி ஆயிற்று ? ஸ்ரீகிருஷ்ணர் தனது விஸ்வரூபம் காட்டிய பிறகுதான். 

        நிஜானம் பெற்றவறால் தான் நிஜமான பக்தி பெற முடியும். நெய் தொன்னையில் இருந்து வெளியே வழியாமல் இருக்க தொன்னை தான் காரணம். ஆனால் தொன்னை சரிந்து விழாமல் பறந்து போகாமல்  இருக்க நெய்தானே காரணம் ? ஆக அறிவால் பக்தியும் பக்தியால் அறிவும் வளர்கிறது. இதுவே "நெய்க்கு தொன்னை ஆதாரம், தொன்னைக்கு நெய் ஆதாரம்" என்று பெயர் பெற்றது. 

        பக்தியில் இரண்டு வகை இருப்பதால் தான் அதை புரிந்து கொள்ள முடியும். : 1. சாத்திய பக்தி, 2. சாதனா பக்தி. பக்தியின் அளவுகோல் என்ன ? நமது விருப்பங்களை தியாகம் செய்யும் அளவே பக்தி பெருக காரணம்லௌகீக உலக வாழ்க்கை தான் அதிக அறிவை உயர்ந்த அறிவை அதாவது பக்தியை தடுக்கிறது.

ஆடியோ-2 : பக்திக்கு அளவுகோல் என்ன, தடைகள் என்ன ? 

        ஞானம் வர காரணம் எது ? அறிவில்  வளர்ச்சி வர , பக்தியிலும் வளர்ச்சி வரும். இரண்டும் சேரவில்லை இல்லை என்றால் இரண்டும் வரவில்லை. ஆக அறிவிற்கு காரணம் என்ன ?  சிரத்தை / நம்பிக்கை உள்ளவன் அறிவை அறிகின்றான். 

        சிரத்தை : "நீ கடவுளை காட்டினால் நான் கடவுளை நம்புவேன். நீ கடவுளை நம்பினால் கடவுளை காண்பாய்" . எது சரி ? இரண்டாவது. ஆக ஒருவரை நம்பினால் உங்களுக்கு தெரியாததை அவர் மூலம் காணலாம். பிறகு அவர் உங்களுக்கு அதை காட்டுவார். அவர் காட்டும்போது உங்களுக்கு வருவது நம்பிக்கையா ஞானமா ? ஞானம். நம்பிக்கை என்பது அறிவுக்கு முன் படி. கடவுளை பார்த்து விட்டால் பிறகு ஏன் நம்ப வேண்டும். அது ஞானம் ஆகி விட்டது. ஆக, சிரத்தை (நம்பிக்கை) வந்தால்தான் ஞானம் வரும். 

        தத்துவமும் மனோ தத்துவமும் வேறு வேறு அல்ல. ஒருவருக்கு  "கடவுள் மீது நம்பிக்கை இல்லை" எனில் அவர் எந்த நிலையில் இருக்கிறார் ? கடவுளைப் பற்றி அறிந்ததால் நம்பவில்லையா அல்லது எதுவும் தெரியாததால் நம்பிக்கை இல்லையா !! ஞானிக்கு கடவுள் மீது நம்பிக்கை இருக்காது, ஏனென்றால் அவர் நம்பிக்கையின் பலனை அடைந்து விட்டார். அறியாத ஒருவருக்கு நம்பிக்கை வந்து விட்டால் அவர் ஞானத்துக்கு தயார் ஆகி விட்டார் என பொருள். 

        ஆதாரத்துடன் இல்லாததே நம்பிக்கை. ஆதாரம் இல்லாமல், ஒன்று  உள்ளது அல்லது இல்லை என்று சொல்வதே நம்பிக்கை , சிரத்தை.  கடவுளை "நம்புபவன்" முட்டாள் என்பது சரியே. அதாவது தான் அறியாத ஒன்றை மற்றவர் சொல்வதால் மட்டுமே ஏற்றுக் கொள்வதே நம்பிக்கை. நாமே ஆராய்ந்து புரிந்து கொண்ட பின் தான்  நம்பிக்கை  அறிவாக மாறுகிறது. ஆகவே நம்பிக்கையை அறிவாக மாற்ற வேண்டும். (தொடரும்) அடுத்த பகுதி லிங்க்