பூர்ணாலயம்-16 : வேதம் உபநிஷத்-கீதை



(சுருக்கமான விளக்கமும், சில சமஸ்க்ரித வார்த்தைகளும்)
(ஆடியோ கேட்டு தெரிந்து கொண்டவைகளை 
எனக்கு நினைவு படுத்தவே இந்த குறிப்புகள் )

கூடுதல் குறிப்பு : நாம் தெரிந்து கொண்டதை மற்றவருக்கு சொல்லும்பொது சமஸ்க்ருத வார்த்தையை சேர்த்து சொன்னால் கருத்துக்கு  மதிப்பு அதிகம். ஆகவே ஒரு கருத்தின் தலைப்பை (ஒரு சில வார்த்தைகள் மட்டும்) சமஸ்கிருதத்தில் நினைவு வைப்பது நல்லது; (வாக்கியத்தை அல்ல, அது நம்மால் முடியாது)
கூடுதல் குறிப்பு நேற்றைய கட்டுரையை மீண்டும் இப்போது படித்துவிட்டு வந்தால் இன்றைய கட்டுரை நன்றாக புரியும். 


ஆடியோ -5 

தர்மத்துடன் உலக வாழ்க்கை வாழ வேண்டும் (கர்மயோகத்தில் சொல்லப் பட்டவாறு) என்று இருப்பவர்களே மதத்தில் இருப்பவர்கள் என முன்பே பார்த்தோம். இவர்கள் பல நிலைகளை கடந்து வைராக்கியம் அடைந்து யோகி ஆக மாறி பின் ஞானியாக மாறி ஆராய்ச்சி செய்து (அறியாமை, மோகம் இரண்டையும் நீக்கி, மனதை உலக இன்பம் அடைவதில் இருந்து மாற்ற வேண்டும்). அறிவை அடைய குருவை நாட வேண்டும். 

5. எப்படிப்பட்ட குருவை நாட வேண்டும் ? srowtthriyaha and brahmmanishtaha ஏற்கனவே சம்பிரதாய குருவிடம் நம் குரு  கற்று இருக்க வேண்டும். படிப்படியாக அறிவை பெற வேண்டும். காதில் கேட்டு மனதில் இருத்த வேண்டும். வேதாந்தம் எல்லோருக்கும் பிடிக்கும் படி சொல்ல வேண்டும். அடுத்து, அவர் ஞானத்தில் நிலை பெற்றவர் ஆக அதிகம் பேசாதவராக  இருக்க வேண்டும். இரண்டு தகுதியும் தனி தனி. இரண்டும் இருக்க வேண்டும் குருவுக்கு . (ரமண ரிஷியிடம் இரண்டாவது அதிகம்).  

6. குருவை நாடும்போது சிஷ்யனுடைய மனம் எப்படி இருக்க வேண்டும் ?
அறிவை எப்படி எல்லாம் வாங்க வேண்டும் ? 1. பணம், 2. அறிவை பகிர்ந்து, 3. சேவை . ஆனால் சேவை செய்து பெற்ற அறிவில் தான் நிலைத்தன்மை கிடைக்கும். ஆகவே குருவிடம் சேவை மூலமாக பக்தியுடன் கற்க வேண்டும். தாய் தந்தையே முதல் குரு ஒருவருக்கு. மேலும் குருவை விட ஒரு படி மேலே சென்று, தாய் தந்தை என்பவர் பிள்ளைக்கு சேவை செய்து அறிவை தருகிறார்கள். 

("மதத்தில் இருந்து தத்துவதிற்கு", என்ற கட்டுரை முடிந்தது)
அடுத்து வேறு தலைப்பு : "யாருக்கு விடுதலை" ?  NEXT