பூர்ணாலயம்-20 : வேதம் உபநிஷத்-கீதை
இணைய தளம் : https://www.poornalayam.org/classes-recorded/
(சுருக்கமான விளக்கமும், சில சமஸ்க்ரித வார்த்தைகளும்)
(ஆடியோ கேட்டு தெரிந்து கொண்டவைகளை
எனக்கு நினைவு படுத்தவே இந்த குறிப்புகள் )
கூடுதல் குறிப்பு : நேற்றைய கட்டுரையை மீண்டும் இப்போது படித்துவிட்டு வந்தால் இன்றைய கட்டுரை நன்றாக புரியும்.
தலைப்பு : யாருக்கு விடுதலை ?
ஆடியோ-6
பந்தத்தில் இருந்து விடுதலை (மோக்ஷம்) அடைந்த மனம் எப்படி அதில் நிலை பெறும்? அதன் பலன் எப்படி இருக்கும் ?
மோக்ஷம் = மனநிறைவு ; வயிறு போல மனம் (எப்போதுமே) நிறையாமல், மீண்டும் மீண்டும் வெற்றிடம் இருப்பது அல்ல ; மனதில் ஆசை மீண்டும் மீண்டும் வராமல் இருந்தால் மோக்ஷம் அடைவது . அபூர்ணத்வம் = வெற்றிடம் ; மனநிறைவு வராவிட்டால் மீண்டும் ஆசை அல்லது பயம், சோகம், போன்றவை வரும் - அதிருப்தியில் இருந்து உருவானது ஆசை - ஆசைபட்டது கிடைக்காவிடில் அது துயரம், கிடைத்து விட்டால் அது லோபம் (கிடைத்ததை இழக்க மனம் இல்லை) - திருப்தியில் இருந்தும் உருவாகும் ஆசை நம்மை பந்தப் படுத்தாது, அது இறைவன் ஆசை:
ஞானி எதை/எதற்கு ஆசைப்படுவான் ? பொருள்களின் ஆசையை எடுத்து விட்டது - ஞானம் அனைத்து பொருளையும் (ஸர்வார்த்த பாவம் ) தனதாக்கி விடும் (ஏற்கனவே உள்ளவற்றை ஏன் மீண்டும் கேட்போம்) - ஞானியில் (கர்ம பலனை அனுபவிக்கும்) போக்தா இல்லை (ஐந்து வயதில் விளையாடிய பொம்மைக்கு இருபது வயதில் ஆர்வம் வராதது போல ) - கஸ்ய காமாய = "ஆசைப்படும் ஆள் எங்கே ?"
பயத்தினால் வரும் கஷ்டத்திற்கு துயரம் அதிகம் ! தாங்க முடியாத வலிக்கு நினைவு போய்விடும் ! அறிவால் நீக்க முடியாத வலியை மரணம் வரும்வரை கரும்பை கடிப்பது போல பொறுக்க வேண்டும்; அதற்கு கர்மயோகத்தை தர்மம், ஞானம், தானம் சேர்த்து பயிற்சி செய்ய மோக்ஷம் கிடைக்கும். NEXT

