பூரணாலயம்-9: வேதம்-உபநிஷத்-கீதை


(சுருக்கமான விளக்கமும், சமஸ்க்ரித வார்த்தைகளும்)
(ஆடியோ கேட்டு தெரிந்து கொண்டவைகளை 
எனக்கு நினைவு படுத்தவே இந்த குறிப்புகள் )

கூடுதல் குறிப்பு : நாம் தெரிந்து கொண்டதை மற்றவருக்கு சொல்லும்பொது சமஸ்க்ருத வார்த்தையை சேர்த்து சொன்னால் கருத்துக்கு  மதிப்பு அதிகம். ஆகவே ஒரு கருத்தின் தலைப்பை (ஒரு சில வார்த்தைகள் மட்டும்) சமஸ்கிருதத்தில் நினைவு வைப்பது நல்லது; (வாக்கியத்தை அல்ல, அது நம்மால் முடியாது)
கூடுதல் குறிப்பு நேற்றைய கட்டுரையை மீண்டும் இப்போது படித்துவிட்டு வந்தால் இன்றைய கட்டுரை நன்றாக புரியும். 

ஆடியோ-5 தொடர்ச்சி :         ஐன்ஸ்டீன் தந்த ரிலேட்டிவிட்டி தியரி என்ன என்று கேட்டால் புரொஃபசர்கள் எங்களுக்கு சொல்லதான் தெரியும், விளக்க தெரியாது என சொல்கிறார்கள். அவ்வாறு நுண்ணிய அறிவால் விளக்க வருவது : ஒருவன் தாய் தந்தை குரு ஆகியோருடன் நல்ல இணக்கத்தை வைத்து அன்பை அனுபவித்தவனுக்கு  உணர்வில் ஞானம் இருக்கும் என்று சொல்வது emotional maturity ; உணர்ச்சியை வெல்ல முடியும். இது மாண்டுக உபநிஷத்தில் வருகிறது; மென்மையான அனுபவத்தில்தான் நுண்மையான அறிவு, ஞானத்தை அடைய முடியும். பெரிய தத்துவத்தை புரிந்து அடைய முடிய முடியும். இவன் அன்பை எல்லோருக்கும் கொடுப்பான், இவன் அன்புக்காக ஏங்கமாட்டான். அன்பை சரியாக அனுபவிக்காத பட்சத்தில் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கும். அந்த சிரமத்தை சீர் செய்யவே பக்தி பயன்படும். அந்த குறை இருந்தால் குருவிடம் சென்றால் ("த்வமேவ மாதா, த்வமேவ பிதா த்வமேவ சகா") அவை நிவர்த்தி செய்யப்படும். 
இதனால் மனப்பக்குவம் கிடைக்கும் ; . (முதலில் மனோபலம் கேட்டோம்). இப்போது நாம் சொல்வோம்: "இறைவா , எதைக் கொடுத்தாயோ அதற்கு நன்றி, கொடுக்காததற்கு மேலும் நன்றி "
பக்தியினால் பாதுகாப்பு உணர்வு கிடைக்கிறது. 

        வீட்டில் யார் யார் மீது அன்பு செலுத்தவில்லையோ அவர் மேல் அன்பு செலுத்துங்கள். அன்பு தானம் (எதிர்பார்ப்பு இல்லாமல்) செய்யுங்கள். வெறுப்பை தருபவருக்கு அன்பை கொடுப்பதே அன்பு தானம். அன்பு ஆனாலும் கோபம் ஆனாலும் முதலில் அதை அனுபவிப்பது நாம்தான். பிறகு தான் அது யார் மீது செலுத்தப் பட்டதோ அவர்கள் அதை அனுபவிப்பார்கள். 

        ஆகவே பக்தியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பக்தி இல்லாத வேதாந்தம் இல்லை ; எனக்கு வேதாந்தம் மட்டும் போதும் என சொல்ல முடியாது. ஏனென்றால், மேலே சொல்லி உள்ளோம் : மென்மையான அனுபவத்தில்தான் நுண்மையான அறிவு, ஞானத்தை அடைய முடியும். ஆக பக்தியின் தேவை, அதன் பலன் இரண்டையும் இந்த வகுப்பில் பார்த்தோம். 

ஆடியோ 6 :

    பக்தி மனோபலத்தை தரும் - இதை வைத்தே நாம் அசாதாரண காரியங்களை கையாள முடியும். -  நமது மனம் கடந்த கால துயரம் காரணமாக மனம் தளர்ந்து விட்டாலும், பக்தியானது அறிவு மூலம் அதை வென்று மீண்டும் வளர்ச்சி பாதையில் செலுத்தும். - பக்தி ஏன் தேவை, என்ன பலன் ? - 
    வேதம் சொல்லும் விதிகளை நன்கு புரிந்து கொண்டு நடக்க வேண்டும் - இதை யார் சொன்னால் பக்தன் சிரத்தையுடன் கேட்பான் ? அவன் யாரை விரும்புகிரானோ அவர் சொன்னால் தான் கேட்பான் - ஆகவே குருவின் மீது சிஷ்யனுக்கு நம்பிக்கையும் அறிவும் வர வேண்டும். ராவணனின் ஆட்சியில் பலர் கடுமையான தவம் செய்தும் இந்த நம்பிக்கை, ஒழுக்கம் இல்லாததால் பயன் அடையவில்லை. அனைத்து தவங்களும் பக்தி இல்லாமலும் செய்தால் ? 

    விதி நிஷேதம் (செய்ய கூடாதது என வேதங்களில் சொல்லப் பட்டவை) என்பதில் பக்தி இருக்க வேண்டும். அதை சொல்பவர் மீது அதீத நம்பிக்கை வைக்க வேண்டும். - வேதம் தானே சொன்னது , பகவான் எங்கு வந்தார் என கேட்க முடியாது. வேதம் சொன்னவரே பகவான் தான் (ஸ்ருதி) - பகவான்,  ரிஷிகள் (ஸ்மிருதி) வழியாக, மகான்கள் வழியாக பேசுகிறார் - இப்படிப்பட்டவர் மூலமாக கேட்க நம்பிக்கை வேண்டும்.  (அடுத்தது)